மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி.. பெரும்பான்மையை நிரூபித்த சிவராஜ் சிங் சவுகான் !

செவ்வாய், 24 மார்ச் 2020 (14:17 IST)
மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி.. பெரும்பான்மையை நிரூபித்த சிவராஜ் சிங் சவுகான் !

மத்தியபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜோதிராதித்யா சிந்தியா ஆதரவாளர்கள் 22 எம்எல்ஏக்கள் திடீரென பதவி விலகியதை அடுத்து கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது. தனது பெரும்பான்மையை கமல்நாத் நிரூபிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க முன்னரே கடந்த 20ஆம் தேதி கமல்நாத் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

இந்த நிலையில் பாஜக தலைமையிலான ஆட்சி மத்திய பிரதேச மாநிலத்தில் ஏற்படும் என்று அரசியல் வல்லுநர்கள் கருத்துக் கூறினார்கள். அதன்பின்னர், மத்திய பிரதேச மாநில முதல்வராக பாஜகவின் சிவராஜ்சிங் சவுகான் அவர்கள் நேற்றுப் பதவி ஏற்றார்

ஆளுநர் மாளிகையில் சிவராஜ்சிங் சவுகான் பதவியேற்றதை அடுத்து அவர் விரைவில் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், மத்திய பிரதேச சட்டப்பேரவையில் இன்று சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில்,  காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்கவில்லை.  ஆனால் பாஜக எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் சிவரஜ் சிங் சவுகான் பெரும்பான்மையை நிரூபித்தார். தன் கட்சியின் பெரும்பான்மையை நிரூபித்ததன் மூலம் அவர் 4 முறையாக முதல்வராகப் பதவியேற்கவுள்ளார்.

ஏற்கனவே கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை மத்திய பிரதேச மாநில முதலமைச்சராக இருந்த சிவராஜ்சிங் சவுகான், 2 ஆண்டு இடைவெளிக்குப் பின் மீண்டும் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சராக பதவியேற்ற சிவராஜ்சிங் சவுகான் அவர்களுக்கு பாஜக தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்