மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியில் சிக்கலா? 28 தொகுதியில் போட்டியிட முடிவு..!

Mahendran

செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (11:55 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 48 பாராளுமன்ற தொகுதிகள் இருக்கும் நிலையில் அதில் 28 தொகுதிகளில் பாஜக போட்டியிட போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பாஜக கூட்டணியில் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த தேர்தலில் பாஜக 26 தொகுதிகளில் போட்டியிட்டு 24 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சியான சிவசேனா 22 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது

இந்த நிலையில் தற்போது அஜித் பவர் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் இயக்குனர் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி ஆகியவை பாஜகவுடன் கூட்டணியில் உள்ளது

இந்த நிலையில் பாஜக 28 தொகுதிகளில் இந்த முறை போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் தலா 10 தொகுதிகள் கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
 
இதற்கு இரு கட்சிகளுமே எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூடுதல் தொகுதிகளுக்கு கேட்டு ஷிண்டே அணியில் உள்ள எம்பிக்கள் பிரச்சனை செய்வதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்