இந்தூரில் பாஜக எம்.எல்.ஏ வாக இருப்பவர் ஆகாஷ் விஜயவர்கியா. இவர் பாஜக பொதுச்செயலாளரான கைலாஷ் விஜயவர்கியாவின் மகன். இன்று, ஆகாஷ் மாநகராட்சி அலுவலக அதிகாரியை தன் கையில் வைத்திருந்த கிரிக்கெட் மட்டையால் தாக்கிய சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் சம்பந்தமாக 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.