ராகுலின் அரசியல் எதிா்காலம் மங்கி வருகிறது: பாஜக மூத்த தலைவர் கருத்து!

திங்கள், 26 டிசம்பர் 2022 (10:00 IST)
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு அரசியல் எதிர்காலம் மங்கிவிட்டதாக பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தற்போது இந்திய ஒற்றுமை பயணத்தை சென்று கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு ஏராளமான மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது என்றும் அதனால் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பலன்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
அதுமட்டுமின்றி இந்தியா சீனா எல்லை பிரச்சனை குறித்து அவர் பேசி வருகிறார். இந்த நிலையில் ராகுல் காந்தியின் அரசியல் எதிர்காலம் தொடர்ந்து மங்கி வருவதாக பாஜக தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்
 
இந்தியா சீனா எல்லை பிரச்சனை குறித்து ராகுல் காந்தி அதிகம் பேசுகிறார் என்றும் ஆனால் உண்மையில் இந்திய பகுதியை சீன ஆக்கிரமித்தது காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தான் என்றும் குறிப்பாக நேரு தலைமையிலான ஆட்சி காலத்தில் தான் அதிகம் ஆக்கிரமிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்