மாணவிகளுக்கு ஸ்கூட்டர், இளைஞர்களுக்கு ஸ்மார்ட்போன் இலவசம்: பாஜக தேர்தல் அறிக்கை

வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (10:32 IST)
திரிபுரா மாநிலத்தில் வரும் 16ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பாஜக சற்று முன் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. 
 
கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்கப்படும் என்றும் ஏழை குடும்பங்களுக்கு இரண்டு இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும் அனைவருக்கும் ரூபாய் ஐந்துக்கு உணவு வழங்கப்படும் என்றும் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும் 50,000 இளைஞர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன் வழங்கப்படும் என்றும் நிலமற்ற விவசாயிகளுக்கு ரூபாய் 3000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
60 தொகுதிகள் கொண்ட திரிபுரா சட்டமன்ற தேர்தலில் பாஜக, கம்யூனிஸ்ட் மற்றும் டி.எம்.பி ஆகிய மும்முனை போட்டி உள்ளது என்பதும் இதில் 31 தொகுதிகள் வெற்றி பெறும் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்