பட்டாசுகளை வெடிக்க பாஜகவினர் தூண்டினார்களா? அதிர்ச்சி தகவல்

வெள்ளி, 5 நவம்பர் 2021 (16:19 IST)
பட்டாசுகளை வெடிக்க பாஜகவினர் தூண்டினார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தீபாவளி அன்றும் பட்டாசுகள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வெடிக்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக அனைத்து மாநில அரசுகளும் சில நிபந்தனைகளை விதித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அரசு விதித்த கட்டுப்பாடுகளை மீறி தீபாவளி அன்றும் பட்டாசுகள் வெடிக்க பட்டதன் காரணமாக நச்சுக்காற்று அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பட்டாசுகளை வெடிக்க மக்களை பாஜக தூண்டியதாக டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் என்பவர் குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இருப்பினும் ஏராளமானோர் பட்டாசு வெடிக்க வில்லை என்றும் அவர்களுக்கு தனது நன்றி என்றும் சிலர் வேண்டுமென்றே பட்டாசு வெடிக்கிறார்கள் என்றும் பாஜக அவர்களை வெடிக்க வைத்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்