நான் வேட்பாளரே இல்லை: பாஜக தலைமை அறிவித்த வேட்பாளர் அறிவிப்பு!

திங்கள், 15 மார்ச் 2021 (22:26 IST)
நான் வேட்பாளரே இல்லை என்றும் பாஜக கட்சியை சேர்ந்தவரும் இல்லை என்றும் எப்படி எனது பெயர் வேட்பாளர்பட்டியல் வந்தது என்று எனக்கு தெரியாது என்றும் பாஜக தலைமையால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அறிவித்து உள்ளது. இந்த நிலையில் கேரளாவில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியல் சமீபத்தில் வெளியானது 
 
இதில் வயநாடு தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மணிகண்டன் என்பவர் திடீரென பேட்டி அளித்துள்ளார். அதில் நான் பாஜகவை சேர்ந்தவன் அல்ல, பாஜக ஆதரவாளர் அல்ல என்னை வேட்பாளராக தேர்வு செய்ததை நான் நிராகரிக்கிறேன். என்னை எப்படி வேட்பாளராக தேர்ந்தெடுத்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்