இந்நிலையில், பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் இதன் அபாயத்தை குறைக்க கேரளாவில் கோழி, வாத்துகள் அழிக்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து, பறவைக் காய்ச்சலை மாநில பேரிடராக அறிவித்ததுள்ளது கேரள அரசு. கோட்டயம், ஆலப்புழா ஆகிய கேரள மாவட்டங்களில் பறவைக்காய்ச்சல் தீவிரமானதால் கேரள அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.