10ஆம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு பிரியாணி: தொழிலதிபரின் முயற்சி!

வெள்ளி, 16 ஜூலை 2021 (21:15 IST)
கேரளாவில் சமீபத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அந்தத் தேர்வில் 99.47 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர். கொரோனா பாதிப்பு காரணமாக கல்வியாண்டு முறையாக செயல்படாததால் தேர்வுகள் எளிமையாக நடத்தப்பட்டதால் தேர்ச்சி சதவீதம் அதிகமாக கூறப்பட்டது 
 
ஆனால் அதே நேரத்தில் எளிமையாக கேள்விகள் கேட்கப்பட்டும் இந்த தேர்வில் 2296 மாணவர்கள் தோல்வி அடைந்தனர். இந்த நிலையில் தேர்வில் வெற்றி பெற்றதை மாணவர்கள் கொண்டாடி வரும் நிலையில் தோல்வி அடைந்தவர்களின் மன நிலையை சமன்படுத்துவதற்காக தொழிலதிபர் ஒருவர் தன்னுடைய தங்கும் விடுதியில் இடம் கொடுத்ததோடு பிரியாணியும் இலவசமாக கொடுக்கிறார் 
 
இதுகுறித்து அவர் கூறிய போது தோல்வி அடைந்தவர்கள் மனநிலை குறித்து யோசித்து பார்த்தேன். தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் பலர் எனக்கு போன் செய்தனர். அதில் பெரும்பாலானோர் சமூக பொருளாதார ரீதியில் பின்தங்கிய வருகின்றனர். அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் அவர்கள் அடுத்த தேர்வில் தேர்ச்சி பெறும் வரை எனது தங்கும் விடுதியில் தங்க இடமும் இலவச பிரியாணியும் அளிக்க இருப்பதாக தெரிவித்தார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்