தமிழக அரசு தேர்வுத்துறை இதுகுறித்து மேலும் கூறியபோது தமிழக மாணவர்களின் பிளஸ் 2 தேர்வு முடிவு மற்றும் மதிப்பெண் பட்டியல் 4 இணையதளங்களில் வெளியிடப்படும் என்றும் ஜூலை 19ஆம் தேதி தேர்வு முடிவும், ஜூலை 21ஆம் தேதி முதல் மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண் பட்டியல்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண் பட்டியலை டவுன்லோட் செய்ய பதிவெண் மற்றும் பிறந்த நாளை பதிவு செய்தால் போதும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் ஆல் பாஸ் என்று கூறப்பட்ட நிலையில் மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண்களை தெரிந்து கொள்ள மிகுந்த ஆவலுடன் இருக்கிறார்கள்
இந்த நிலையில் தமிழகத்தில் 19ஆம் தேதி தேர்வு முடிவுகளும் 21ம் தேதி மதிப்பெண் பட்டியலும் வெளியாகும் என தமிழக அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மேலும் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்க உள்ள நிலையில் இந்த மதிப்பெண் பட்டியல் அதற்கு முன்கூட்டியே வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது