கங்கையில் மிதந்து வரும் பிணங்கள்: பீகார் அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!

வியாழன், 13 மே 2021 (08:10 IST)
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களை முறைப்படி அடக்கம் செய்யாமல் கங்கை நதியில் தூக்கி வீசப்படும் நிலை ஏற்பட்டு வருவது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது 
 
பெரும்பாலும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பொதுமக்கள்தான் கொரோனா வைரஸால் இறந்தவர்களை கங்கை நதியில் தூக்கி வீசப் வருவதாகவும் அந்த பிணங்கள் கங்கையில் மிதந்து பீகார் மாநிலம் வரை வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இதனை அடுத்து பீகார் அரசு அதிகாரிகள் அதிரடியாக பீகார் மாநிலத்தில் ஓடும் கங்கை நதியில் பல்வேறு இடங்களில் வலைகளை அமைத்து உள்ளனர். இந்த வலைகளில் சிக்கும் பிணங்களை கைப்பற்றி உடனடியாக அவர்கள் அடக்கம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் உத்தரப்பிரதேச மாநில அரசு அம்மாநில பொதுமக்கள் பிணங்களைத் தூக்கி எறியாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பீகார் அரசு கேட்டுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்