அரபிக்கடலில் உருவானது பிபோர்ஜோய் புயல்: அடுத்த 6 மணி நேரத்தில் தீவிரமாகும் என தகவல்..!

புதன், 7 ஜூன் 2023 (07:29 IST)
அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகி இருப்பதாகவும் அது தாழ்வு மண்டலமாக உருவாகி புயலாக உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் தற்போது அரபிக் கடலில் புயல் உருவாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு பிபோர்ஜோய் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. 
 
அரபிக்கடலில் உருவான பிபோர்ஜோய்  என்ற புயல் அடுத்த ஆறு மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெற உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இந்த புயல் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக் கடலில் கோவாவுக்கு 900 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும் மேற்கு மற்றும் தென்மேற்கு பயணம் செய்து புயல் வடக்கில் நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெற கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்