இதனால் இடைவிடாத சேவை பொதுமக்களுக்கு கிடைக்கும். ஆனால் அதே நேரத்தில் இந்த சேவையில் சில முறைகேடுகள் நடப்பதாகவும் கூறப்பட்டது. ஆட்டோ டெபிட் சேவை தேவை இல்லாதவர்களுக்கும் அந்த சேவை குறித்த ஆப்ஷனை வலுக்கட்டாயமாக பதிவு செய்து வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து மாதம் மாதம் பணம் எடுப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன
ஆட்டோ டெபிட் சேவை தேவை என்றால் வாடிக்கையாளரின் மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி அவருடைய அனுமதியை பெற வேண்டும் என்றும் 5,000 ரூபாய்க்கு மேல் உள்ள சேவை என்றால் ஒன் டைம் பாஸ்வேர்டு அனுப்பி வாடிக்கையாளரின் அனுமதியை பெற்று ஆட்டோ டெபிட் மூலம் பணத்தை எடுக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது