வங்கி கணக்கில் குறைந்தபட்ச தொகை; வாடிக்கையாளர்களுக்கு அபராதம்

ஞாயிறு, 5 ஆகஸ்ட் 2018 (16:08 IST)
வங்கி கணக்கில் குறைந்தபட்ச தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 
2017-2018ஆம் ஆண்டின் குறைந்தபட்ச தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.4988 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. 
 
இதுறித்து மத்திய நிதித்துறை இணை மத்திரி பிரதாப்சுல்கா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
2017-18 நிதியாண்டில் ஜன்தன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் குறைந்தபட்ச தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் ரூ.4988 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டது.
 
ஸ்டேட் வங்கி அதிகபட்சமாக ரூ.2434 கோடி அபராதமாக வசூலித்துள்ளது. இதற்கு அடுத்தப்படியாக எச்.டி.எப்.சி.  வங்கி ரூ.590 கோடியும், ஆக்சிஸ் வங்கி ரூ.530  கோடியும், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ரூ.317 கோடியும், பஞ்சாப் நே‌ஷனல் வங்கி ரூ.211 கோடியும் அபராதமாக வசூலித்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்