வங்கிக்கடன் மோசடி வழக்கில் லண்டனில் கைதான வைர வியாபாரி நிரவ்மோடி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிரவ்மோடிக்கு ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சியங்களை கலைத்துவிடுவார் என இந்திய அதிகாரிகள் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து ஜாமீன் மனுவை லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது பேசிய நீதிபதி ‘ 2020 ஆம் ஆண்டு மே மாதத்துக்குள் நீரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைப்பது தொடர்பாக, ஆகஸ்ட் 22ஆம் தேதிக்குள் விசாரணைக்கான தேதிகள் அறிவிக்கப்படும். மேலும் இங்கிலாந்தில் நிலவும் தட்பெவெப்ப நிலைகள் சிறையில் அதிகமாக இல்லை’ என நகைச்சுவையாகக் கூறினார். அதற்குப் பதிலளித்த நீரவ் மோடி ‘ஆம் வெப்பநிலை நன்றாக இருக்கிறது’ எனக் கூறி சிரித்தார்.