நாங்க கொரோனாவை குணப்படுத்திய ஆதாரம் இருக்கு! – பாபா ராம்தேவ் அறிவிப்பு

புதன், 1 ஜூலை 2020 (14:13 IST)
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக விளம்பரம் செய்த பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மீது வழக்கு போடப்பட்ட நிலையில், மருந்து பயனளிப்பதற்கான ஆதாரம் இருப்பதாக பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து வரும் நிலையில் அதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்நிலையில் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கொரோனா தடுப்பு மருந்தாக ‘கொரோனில்’ என்ற மருந்தை விளம்பரப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் அனுமதி பெறாமல் அந்த மருந்து விற்கப்படுவதால் அதை தடை செய்ய வேண்டும் என ராஜஸ்தான் சுகாதாரத்துறை மந்திரி உள்ளிட்ட பலர் தெரிவித்தனர். இந்நிலையில் அரசின் அனுமதி பெறாமல் கொரோனா மருந்து என்று விளம்பரப்படுத்தியதற்காக பாபா ராம்தேவ் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹரித்துவாரில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ள பாபா ராம்தேவ் “பதஞ்சலியின் கொரோனில் மருந்து மூலமாக 7 நாட்களில் கொரோனா நோயாளிகள் குணமடைகின்றனர். இந்த மருந்தின் மூலம் 3 நாட்களில் 67 சதவீதம் நோய் குணமடைகிறது. போதிய ஆராய்ச்சிகளை மேற்கொண்ட பிறகே இது விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இது தொடர்பான ஆவணங்கள் ஆயுஷ் அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்