ஒரே வாரத்தில் ஒரு லட்சம் கொரோனா பாதிப்புகள்! – இந்திய நிலவரம்!

புதன், 1 ஜூலை 2020 (09:50 IST)
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் ஒரே வாரத்திற்குள் புதியதாக ஒரு லட்சம் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஐந்து கட்ட ஊரடங்குகளும் முடிந்து விட்ட நிலையிலும் கொரோனா பாதிப்புகள் அனைத்து மாநிலங்களிலும் அதிகமாக உள்ளது.

ஒரே நாளில் 18 அயிரத்திற்கும் மேற்பட்டோர்ப் பாதிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,85,493 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 17,400 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 3,47,979 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,74,761 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,855 பேர் பலியான நிலையில் 90,911 பேர் குணமடைந்துள்ளனர். இதுதவிர பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மத்திய அரசின் அறிவிப்பின்படி பாதிப்பு எண்ணிக்கை.

தமிழ்நாடு – 90,167
டெல்லி – 87,360
குஜராத் – 32,557
உத்தர பிரதேசம் – 23,492
மேற்கு வங்கம் – 18,559
தெலுங்கானா – 16,339
ராஜஸ்தான் – 18,014
மத்திய பிரதேசம் – 13,593
கர்நாடகா – 15,242
ஹரியானா – 14,548

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்