ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தால் கோவிலுக்கு செல்லாத செய்தியாளர்..

வியாழன், 18 அக்டோபர் 2018 (12:19 IST)
சுப்ரீம் கோர்ட் அண்மையில் அனத்து வயது பெண்களூம் சபரிமலைகோவிலுக்குள் சென்று சாமியை தரிசிக்கலாம் என கூறியதையடுத்து, ஐயப்ப பக்தர்கள் கடந்த வாரம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக இந்த போராட்டம் அதிகரித்து வருகிறது.ஐயப்பன் சுவாமி  பிரம்மச்சாரி ஆகையால் அவரை பெண்கள் தரிசிக்கக்கூடது என கேரளாவில் இருக்கும் ஐயப்ப பக்தகளும் தமிழ்நாட்டில் இருக்கும் பக்தர்களும் பெண்கள் ஐயப்பன் கோவிலுக்குள் செல்லக்கூடது என உறுதிமொழி எடுத்து வந்தனர்.
இருப்பினும் உச்ச நீதிமன்றமே பெண்கள் கோவிலுக்குள் செல்லலாம் என தீர்ப்பு அளித்ததால் பெண்கள் அங்கு செல்ல முயன்றனர். ஆனால் கோவிலுக்கு நடந்து சென்ற பெண்களின் கால்களில் விழுந்தும், கெஞ்சியும் கோவிலுக்குள் செல்ல விடாமல் தடுத்தனர்.
அதனால் கோவிலுக்கு செல்லும் பாதைகளை பக்கதர்கள் மறித்து பெண்களைஅனுமதிக்க மாட்டோம்ம என கூறி போராடிவருவதால் பல பெண்கள் அங்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். 
 
இதில் முக்கியமாக நியூயார்க் செய்தியாளர் சுஹாசினி ராஜ் இன்று கோவிலுக்கு செல்ல முற்படுகையில் பலத்த எதிர்ப்பும் பக்தர்களின் போராட்டம் காரணமாக அவரால் கோவிலுக்குள் செல்ல முடியவில்லை.
இதனையடுத்து செய்தியாளர் தனது குழுவினருடன் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.அவர்களுக்கு போலீஸார் பலத்த பாதுகாப்பு வழங்கி அழைத்து சென்றனர்.
மேலும் பலத்த எதிர்ப்பு தெரிவித்த போராட்ட காரர்களை நோக்கி போலீஸார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர்.
 
இதனால் கேரளா சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்