கொரோனா இரண்டாம் அலை …. ஆட்டோமொபைல் துறையில் தொடங்கிய சரிவு!

செவ்வாய், 11 மே 2021 (12:00 IST)
கொரோனா இரண்டாம் அலை பரவலால் ஆட்டோமொபைல் துறையில் விற்பனை சரிய தொடங்கியுள்ளது.

கொரோனாவுக்கு பிறகு இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. அதற்கு முக்கியக் காரணம், பலரும் பாதுகாப்பு கருதி கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை வாங்க ஆரம்பித்ததுதான். ஆனால் இப்போது இரண்டாவது அலை காரணமாக மீண்டும் ஆட்டோமொபைல் துறை சரிவை சந்தித்துள்ளது. அதிலும் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், கார்களின் விற்பனை 25 சதவிதமும், இரு சக்கர வாகனங்களின் விற்பனை 27 சதவீதமும் குறைந்துள்ளது. இதனால் சில நிறுவனங்கள் இப்போது உற்பத்தியை நிறுத்தி வைக்க ஆரம்பித்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்