ரேஷன் பொருட்கள் வழங்க தானியங்கி ஏடிஎம்: உபி அரசின் அதிரடி அறிவிப்பு..!

சனி, 18 மார்ச் 2023 (18:38 IST)
ரேஷன் கடைகளில் கால் கடுக்க நின்று பொருட்கள் வாங்கும் காலம் முடிந்துவிட்டது என்றும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இதற்காக தானியங்கி ஏடிஎம் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தானியங்கி ரேஷன் கடை ஏடிஎம்களில் ரேசன் அட்டைகளை பதிவு செய்தால் உடனே தேவையான பொருள்கள் கிடைக்கும் என்றும் கைரேகை பதிவு செய்தவுடன் ஏடிஎம் மூலம் பொருட்கள் வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
உத்தரபிரதேச மாநிலத்தில் முதல் கட்டமாக வாரணாசி நொய்டா ஆகிய பகுதிகளில் இந்த ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளன என்பதும் அரிசி கோதுமை உள்ளிட்டவைகள் நிரப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் 7 நிமிடத்தில் இந்த இயந்திரங்கள் பயனாளர்களுக்கு பொருட்களை சரியான எடையில் வழங்கும் என்றும் முறைகேடுகள் நடத்தவும் முடியாது என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த இயந்திரங்களை மாநிலம் முழுவதும் அமைக்க உத்தர பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்