ஏடிஎம் மிஷினுக்கு கம்பளி போர்த்தி, ஹீட்டர் போட்ட பொதுமக்கள்...

செவ்வாய், 9 ஜனவரி 2018 (16:39 IST)
வடமாநிலங்களில் அனைத்து இடங்களிலும் குளிர் அதிகரித்து இருப்பதால் மக்கள் கம்பளி, ஸ்வட்டருடன் நடமாடி வருகின்றனர். இந்நிலையில், இமாசலப்பிரசேதத்தில் ஏடிஎம் இயந்திரத்துக்கும் கம்பளி போர்த்தப்பட்டுள்ளது. 
 
அதோடு நிறுத்தாமல், அங்கு ஹீட்டர் போட்டும் வைத்துள்ளனர். இமாசலப்பிரதேசத்தில் லஹவுல்ஸ்பிதி மாவட்டத்தில் உள்ள கீலாங் என்ற இடத்தில் உள்ள ஒரு ஏடிஎம் இயந்திரத்துக்கு இந்த நிலைமை. இதற்கு ஒரு காரணமும் சொல்லப்பட்டுள்ளது. 
 
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் கீலாங் பகுதி மேலாளர் கூறியதாவது, வங்கியின் ஏடிஎம் மையத்திற்கு வாடிக்கையாளர்கள் வரும்போது (பகல் நேரங்களில்) ஏடிஎம் இயந்திரத்துக்கு ஹீட்டர் போடுவது மற்றும் கம்பளிகளைக் கொண்டு மூடி வைப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
 
சாதாரண நேரங்களில் இயந்திரத்தின் மீது சூரிய ஒளிபடும். ஆனால், தற்போது குளிர் அதிக அளவில் உள்ளதால், சூரிய வெளிச்சத்திற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. இதனால் இயந்திரம் ஜாம் ஆகாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். 
 
பொதுவாக இமாசலப் பிரதேசத்தின் பல இடங்களில் குளிர் காலத்தில் ஏடிஎம் இயந்திரங்கள் ஜாம் ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்