நிலவை தோளில் சுமக்கும் பாகுபலி – அசாம் போலீஸ் வெளியிட்ட வைரல் புகைப்படம்

புதன், 24 ஜூலை 2019 (20:30 IST)
சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டதை கொண்டாடும் வகையில் அசாம் போலீஸார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி உள்ளது.

நிலவின் தென்பகுதியை ஆராய்வதற்காக கடந்த 22ம் தேதி சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான் 2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு இஸ்ரோவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட பலர் வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் வித்தியாசமான முறையில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது அசாம் போலீஸ்.

பாகுபலி திரைப்படத்தில் லிங்கத்தை பிரபாஸ் தூக்கி செல்வது போன்ற காட்சி ஒன்று வரும். அதை எடிட் செய்து அவர் நிலவை தூக்கி செல்வது போல புகைப்படம் தயாரித்து அதில் தலைப்பாக “சந்திரயான் 2” என எழுதியுள்ளனர். மேலும் “வாழ்த்துக்கள் இஸ்ரோ! பாகுபலி (சந்திரயான் 2) நிலவுக்கு தனது பயணத்தை தொடங்கியுள்ளது விண்வெளி பயணத்திலேயே முக்கியமான வரலாற்று சம்பவமாகும்.” என்று பதிவிட்டுள்ளனர்.

சந்திரயான் 2 செல்லமாக நிலவின் பாகுபலி என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Congratulations @isro!

With 'Bahubali' taking #Chandrayaan2 on a journey to the Moon, you have authored a new chapter in the history of Space Exploration.

Not just India, but Mankind & even Moonkind feel proud and elated today.

May the (F=mdv/dt) be with you! pic.twitter.com/VPrLLiyE8r

— Assam Police (@assampolice) July 22, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்