அசாம் மாநிலத்தில் பக்ஜான் பகுதியில் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் வயல் செயல்பட்டு வருகிறது. கடந்த 14 நாட்களாக எண்ணெய் வயலில் கசிவு ஏற்படுவதாக வெளியான புகாரை தொடர்ந்து வெளிநாடுகளை சேர்ந்த எண்ணெய் வயல் நிபுணர்கள் அங்கு ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் எண்ணெய் வயலில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
இதனால் அங்கிருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதுடன், அருகிலிருந்து கிராமங்களில் வசிக்கும் 1600 குடும்பங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஓஎன்ஜிசி தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். ஆனால் கட்டுக்கடங்காத தீ அருகில் இருந்த வயல்கள், கிராமங்களை தீக்கிரையாக்கி உள்ளது. இந்த விவகாரத்தில் உரிய உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசிடம் அசாம் முதல்வர் சர்பானந்த சோனாவால் கேட்டுக் கொண்டுள்ளார்.