உலகக்கோப்பையில் இந்தியா தோற்க நேரு-காந்தி குடும்பமே காரணம்: அசாம் முதல்வர்

வெள்ளி, 24 நவம்பர் 2023 (16:42 IST)
சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய நிலையில் ஆஸ்திரிலியா அணி அபார வெற்றி பெற்றது. 
 
இந்தியாவின் தோல்விக்கு இந்திய அணியின் வீரர்கள் அன்றைய தினம் சரியாக விளையாடவில்லை என கிரிக்கெட் பிரமுகர்கள் காரணமாக கூறினார். ஆனால் அரசியல்வாதிகள் இந்திய அணியின் தோல்விக்கு பல்வேறு புதுப்புது காரணங்களை கண்டுபிடித்துள்ளனர்  
 
இந்திய அணியின் தோல்வி குறித்து அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா கூறிய போது இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளில் உலகக் கோப்பை இறுதி போட்டி நடைபெற்றதால் தான்  இந்தியா தோல்வி அடைந்தது என்று கூறியுள்ளார் 
 
இனி வரும் காலத்தில் நேரு, காந்தி குடும்ப உறுப்பினர்களின் பிறந்தநாளில்  இந்திய அணி விளையாடாமல் இருப்பதை பிசிசிஐ உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். 
 
ஏற்கனவே உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததற்கு அகமதாபாத் மைதானம் தான் காரணம் என்று மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார். நரேந்திர மோடி பெயரில் உள்ள மைதானத்தில் இறுதிப்போட்டி வைத்ததால் தான் இந்தியா தோல்வி அடைந்தது என்றும் மும்பை அல்லது கொல்கத்தாவில் இந்தியா விளையாடிருந்தால் வெற்றி பெற்றிருக்கும் என்றும் தெரிவித்து இருந்தார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்