சீனாவில் பரவும் நிமோனியா? இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுமா? மத்திய சுகாதாரத்துறை தகவல்..!

வெள்ளி, 24 நவம்பர் 2023 (16:30 IST)
சீனாவில் நிமோனியா காய்ச்சல் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இதனால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

சீனாவில் கடந்த சில நாட்களாக நிமோனியா காய்ச்சல் பரவி வருவதாகவும் இதனால் ஏராளமான பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் சீனாவில் பரவி வரும் நிமோனியா காய்ச்சலால் இந்தியாவுக்கு பாதிப்பு இருக்காது என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இருப்பினும் நிமோனியா பரவலை எதிர்கொள்ள இந்தியா தயார் நிலையில் உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

சீனாவில் காய்ச்சல் பரவி வரும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும்  தேவையான நிமோனியா காய்ச்சல் இந்தியாவில் பரவாத வகையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே சீனாவில் பரவி வரும் நிமோனியா குறித்து உலக சுகாதார மையமும் உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்