தலைமை செயலகத்தில் முதலவர் கார் திருட்டு

வியாழன், 12 அக்டோபர் 2017 (19:44 IST)
டெல்லி தலைமை செயலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த முதல்வர் அரவிந்த கெஜ்ரிவாலின் கார் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது பயன்படுத்திய தலைமை செயலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்று மதியம் முதல் கார் காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நீல நிற வேகான் கார் திருடப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காணாமல் போன கார் 2003ஆம் ஆண்டு குந்தன் ஷர்மா என்பவர் அரவிந்த கெஜ்ரிவாலுக்கு பரிசாக வழங்கியுள்ளர். கார் காணாமல் போனது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
முதல்வரின் கார் தலைமை செயலகத்தில் இருந்து காணாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்