நேற்று இரவு அமலாக்கத்துறை அதிகாரிகளால் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட நிலையில் தனது கைதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வர இருப்பதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கறிஞர் இல்லாமல் தானே அவருக்காக வாதாட போவதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் தற்போது அவர் தனது கைதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்றுள்ளார். அமலாக்கத்துறை சார்ந்த வழக்குகளை வழக்கமாக விசாரிக்கும் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எம் எம் சுந்தரேஷ் மற்றும் பேலாதி வேதி அமர்வுதான் இந்த வழக்கையும் விசாரிக்க இருந்த நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது மனுவை வாபஸ் பெற்றதாக தெரிகிறது