லடாக்கில் 9 இந்திய ராணுவ வீரர்கள் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2023 (11:25 IST)
இந்திய ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதை அடுத்து லடாக் பகுதியில்  ஒன்பது ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  
 
லடாக்கில் இன்று இந்திய ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் ஒன்று எதிர்பாராத விதமான கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒன்பது ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 
 
கியாரி என்ற பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் விபத்து நடந்த சம்பவத்தின் இடத்திற்கு உடனடியாக சென்ற பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மீட்பு பணிகளை துரிதமாக நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்