சென்னை மாணவர்களிடம் தோல்வியடைந்த அமெரிக்க கடற்படை வீரர்கள்

செவ்வாய், 11 ஜூலை 2017 (17:24 IST)
இந்தியாவுடன் கூட்டு பயிற்சியில் ஈடுபட வந்த அமெரிக்க கடற்படை வீரர்கள் சென்னை YMCA மாணவர்களுடன் விளையாடிய கூடைப்பந்து போட்டியில் தோல்வி அடைந்தனர்.


 

 
மலபார் கூட்டு போர் பயிற்சியில் கலந்துக்கொள்ள ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்தியா வந்துள்ளது. தற்போது சென்னை அருகே அமெரிக்க, ஜப்பான் மற்றும் இந்திய கடற்படைகள் கூட்டுப் பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சென்னை YMCA மாணவர்களுடன் அமெரிக்க கடற்படை வீரர்கள் நட்பு ரீதியாக கூடைப்பந்து போட்டியில் விளையாடினர். இந்த போட்டியில் அமெரிக்க வீரர்கள் 36-35 என்ற புள்ளி கணக்கில் சென்னை மாணவர்களிடம் தோல்வி அடைந்தனர். 


 

வெப்துனியாவைப் படிக்கவும்