கொரோனா பாதிப்பு குறையும்: இந்தியா குறித்து ஆறுதல் தரும் ஆய்வு!

சனி, 11 ஏப்ரல் 2020 (11:24 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறையும் என அமெரிக்க ஆய்வு ஒன்று தகவல். 
 
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6761 லிருந்து 7,447 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 206 லிருந்து 239 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 516 லிருந்து 643 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,514 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 911 பேரும், டெல்லியில் 903 பேரும், ராஜஸ்தானில் 553 பேரும், தெலுங்கானாவில் 473 பேரும், கேரளாவில் 364 பேரும், ஆந்திராவில் 363 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
 
இந்நிலையில், நாட்டிற்கே ஆறுதல் தரும் செய்தி ஒன்றை அமெரிக்க ஆய்வு ஒன்று வெளியிட்டுள்ளது. அதாவது, அடுத்த வாரம் முதல் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறையும் என அமெரிக்க மிக்சிகன் பல்கலைக்கழக ஆய்வில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்