அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற செயற்கை கருக்களை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தனர். தற்போது இந்தியாவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற வெளிநாட்டினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை திரும்ப கேட்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில் 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அரசு வெளிநாட்டவர்களுக்கு வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுத்தரும் முறையை தடை செய்தது. அதோடு செயற்கை கருக்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யவும் தடை செய்யப்பட்டது. எனவே அந்த தம்பதியினர் தங்களது செயற்கை கருக்களை திரும்ப தங்களிடமே ஒப்படைக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர், என்று கூறினார்.