தற்போது ஸ்மார்ட்போன், ஆப்பிள் ஐ போன், லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு தனித்தனி சார்ஜர் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் மின்னணு கழிவுகள் அதிகமாகி பெரும் பிரச்சனை ஏற்படுகிறது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மின்னணு கழிவுகளை குறைப்பதற்காக ஸ்மார்ட் போன், லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட அனைத்து சாதனங்களுக்கும் இனி சி டைப் சார்ஜர் மட்டுமே பயன்படுத்தும் வழக்கம் இந்தியாவில் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
இதன் காரணமாக மின்னணு கழிவுகள் குறையும் என்று கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் ஐபோன் தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம் இதற்கு ஒப்புக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும் குறைந்த விலையில் மொபைல் தயாரிக்கும் நிறுவனங்கள் சி டைப் சார்ஜரை வழங்குவதால் அதிக செலவாகும் என்பதால் சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது