மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் சேருவதற்கு ஜூலை 20ஆம் தேதிமுதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் சேர 40 ஆயிரத்து 193 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் ஜூலை 22-ம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்குகிறது.
அதேபோல் ஜூலை 20-ம் தேதி முதல் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு தொடங்குவதாகவும், நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டின்கீழ் 60 ஆயிரம் இடங்கள் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.