அகிலேஷ் யாதவ் - சந்திரசேகர ராவ் திடீர் ஆலோசனை: 3வது அணி உருவாகிறதா?

வெள்ளி, 29 ஜூலை 2022 (19:20 IST)
உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் மற்றும் தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ் ஆகிய இருவரும் திடீரென சந்தித்து ஆலோசனை செய்திருப்பது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகள் தவிர மூன்றாவது அணி அமைக்க தேசிய அளவில் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன
 
தமிழகத்தில் மு க ஸ்டாலின், தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகரராவ், மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி உள்பட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் இது குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர்
 
இந்த நிலையில் டெல்லியில் இன்று சமாஜ்வாடி கட்சி தலைவரும் முன்னாள் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் உடன் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் சந்தித்து ஆலோசனை செய்தார் 
 
மேலும் இந்த ஆலோசனையில் ஆம் ஆத்மி  தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் 3வது அணி அமைப்பது குறித்து இந்த தலைவர்கள் ஆலோசனை செய்துள்ளனர்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்