அஜினமோட்டோ உடலுக்கு எந்த தீங்கும் விளைவிக்காதது! – நிறுவனம் விளக்கம்!
திங்கள், 31 மே 2021 (14:41 IST)
எம்.எஸ்.ஜி. என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோனோ சோடியம் குளுட்டாமேட் எனப்படும் சுவையூட்டி பற்றி பல தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகிறது. உண்மையில் இந்த சுவையூட்டியில் பலவிதமான புரதச் சத்துக்கள் இடம் பெற்றுள்ளன என பல்வேறு ஆய்வு அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
பொதுவாக, பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களில் இயற்கையாகவே பல்வேறு சுவைகள் அடங்கியுள்ளன. இது தான் குளுட்டாமேட் ஆகும். நாம் சமைக்கும் பல்வேறு பதார்த்தங்களில், மோனோ சோடியம் குளுட்டாமேட்டை (எம்.எஸ்.ஜி.) சேர்க்கும்போது சுவை அதிகரிப்பதுடன் பல்வேறு புரதச்சத்துகளும் நமக்கு கிடைக்கிறது. இந்த சுவையூட்டியை சேர்ப்பதால் உடலுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாது. குறிப்பாக, மோனோ சோடியம் குளுட்டாமேட்டில் தாய்ப்பாலில் அடங்கியுள்ள அனைத்து புரதச்சத்துகளும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நாம், வீட்டில் ரசம் செய்யும்போது அதில் தக்காளியை சேர்க்கிறோம். அப்போது ரசத்தின் சுவை எப்படி அதிகரிக்கிறதோ அதே போன்று தான் எம்.எஸ்.ஜி., சுவையூட்டியை சேர்க்கும் ஒவ்வொரு சமையல் பதார்த்தத்திற்கும் அதிக சுவை கிடைக்கிறது.
இந்த சுவையூட்டியை, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானியும், பேராசிரியருமான கிக்குனே இக்கிடா என்பவர் 1909-ஆம் ஆண்டு கண்டறிந்து அறிமுகப்படுத்தினார். இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் குளுட்டாமேட் வாயிலாக கிடைக்கும் இந்த சுவைக்கு, இந்த பேராசிரியர் உமாமி என்றும் பெயர் இட்டார்.
எவ்வித பக்கவிளைவுகளையோ, உடலுக்கு எந்தவிதமான தீமைகளையோ ஏற்படுத்தாத இந்த மோனோசோடியம் குளுட்டாமேட் கரும்பு, மரவள்ளிக்கிழங்கு, மக்காச்சோளம் போன்ற தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக எம்.எஸ்.ஜி. சுவையூட்டி, கரும்பில் இருந்துதான் அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் கரும்பு, ஆலைகளில் இடப்பட்டு சாராக பிழியப்படுகிறது. அந்த கரும்புச் சார், நொதிக்க வைக்கப்பட்டு, எவ்வாறு பாலிலிருந்து தயிர் உருவாக்கப்படுகிறதோ அதேபோன்று பதப்படுத்தப்படுகிறது. அவ்வாறு கிடைக்கும் திரவம் குளுட்டாமிக் ஆசிட் என்று அழைக்கப்படுகிறது. பின்பு, குளுட்டாமிக் ஆசிட் பதனப்படுத்தப்பட்டு மோனோசோடியம் குளுட்டாமேட் என்ற திடப்பொருளாக மாற்றப்படுகிறது. பின்பு, வெப்ப மற்றும் குளிர் காற்று மூலம் உலர வைக்கப்பட்டு சிறிய, சிறிய பொடிகளாக (சர்க்கரை போன்று) செய்து, பாக்கெட்டுகளில் இடப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
இவ்வாறு இயற்கை முறையில் தயாரிக்கப்படும் மோனோசோடியம் குளுட்டாமேட் 100 சதவீத சைவ உணவுப்பொருள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சுவையூட்டி கண்டுபிடிக்கப்பட்டு ஜப்பானில் பல ஆண்டுகளாக பயன்படுத்தபட்டு வந்த நிலையில், அமெரிக்காவில் 1964-ம் ஆண்டிலும், இந்தியாவில் 2003-ம் ஆண்டிலும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில், துவக்கத்தில், பெரிய ஹோட்டல்கள், தொழிற்சாலைகளிலுள்ள சமையல் கூடங்கள் போன்றவற்றில் மிக அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த எம்.எஸ்.ஜி. சுவையூட்டி, பின்பு படிப்படியாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் சில்லரையில் விற்பனை செய்யப்பட்டது.
மோனோசோடியம் குளுட்டாமேட் என்பது இதன் பண்பு பெயர். இன்று உலகளவில் அஜினோமோட்டோ, விவன் மற்றும் விவான் உள்ளிட்ட ஒரு சில அமைப்பு சார்ந்த நிறுவனங்களே இதன் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், இந்த அமைப்பு சார்ந்த நிறுவனங்களின் பங்களிப்பு வெறும் 10 சதவீதம் மட்டுமே. மீதமுள்ள 90 சதவீத பங்களிப்பை, அமைப்புசாராத சீன நிறுவனங்களே அளித்து வருகின்றன.
பல ஆண்டுகள் எவ்வித இடர்ப்பாடும் இல்லாமல் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த சுவையூட்டிக்கு கடந்த 2010-ம் ஆண்டில் பிரச்சினை ஏற்படத்தொடங்கியது. தரமற்ற சீன தயாரிப்பு மோனோசோடியம் குளுட்டாமேட்டினால், உணவுப்பொருட்களின் தரம் குறைந்ததுடன், ஒரு சில பக்க விளைவுகளும் ஏற்பட்டன. இந்த நிலைப்பாட்டை சரி செய்ய, இதன் தயாரிப்பில் ஈடுபட்டுவரும் அமைப்பு சார்ந்த நிறுவனங்கள் மிகவும் போராட வேண்டியிருந்தது.
இதையடுத்து, உலக சுகாதார அமைப்பும் (டபிள்யூ.எச்.ஓ.) உணவு மற்றும் வேளாண் அமைப்பும் (எஃப்.ஏ.ஓ.) இணைந்து, உணவு சார்ந்த இடைநிலை பொருட்களை ஆய்வுசெய்வதற்கான ஒரு குழுவை ஏற்படுத்தி ஆய்வறிக்கை அளிக்கும்படி பணித்தன. இக்குழு, மோனோசோடியம் குளுட்டாமேட்-ஐ ஆய்வுசெய்து, இந்த உணவு இடைநிலைப்பொருளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உணவுப்பொருள்களுடன் சேர்த்துக்கொள்ளலாம் என்றும், இது மிகவும் பாதுகாப்பானது என்றும் சான்று அளித்தது. இது தவிர, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாக அமைப்பு (யு.எஸ்.எஃப்.டீ.ஏ.), ஐரோப்பிய கூட்டமைப்பின் உணவு அறிவியல் ஆய்வு குழுவும் இதன் பாதுகாப்புத்தன்மையை உறுதிசெய்தன. மேற்கண்ட அமைப்புகள் தவிர இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமும் (எப். எஸ்.எஸ்.ஏ.ஐ), இந்த சுவையூட்டியான மோனோசோடியம் குளுட்டாமேட், உணவு பொருட்களுடன் சேர்த்து கொள்வதற்கு உகந்தது என சான்று அளித்துள்ளது.
தற்போது, மோனோசோடியம் குளுட்டாமேட்டின் விற்பனை உலகளவில் ஆண்டுக்கு 4.6 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. இந்தியாவில் இந்த கூவையூட்டியின் விற்பனை அளவின் அடிப்படையில் ஆண்டுக்கு 10,500 மெட்ரிக் டன்னாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மோனோசோடியம் குளுட்டாமேட் சுவையூட்டியை, ரசம், குழம்பு, வெஜிடெபில், ஃப்ரைட் ரைஸ், முருங்கைக்காய் கறி, பொரியல், கோழி கறி, மாமிசம், மீன் உணவு வகைகள், சாஸ், சூப் உள்ளிட்ட அனைத்து உணவு பொருட்களிலும் சேர்த்துக்கொள்ளலாம்.
இந்த சுவையூட்டியால் எவ்வித தீங்கும் ஏற்படுவது இல்லை. எனவே சிறிய குழந்தைகள், கர்பிணிகள், என அனைத்து தரப்பு மக்களும், உணவு பொருட்களுடன் இதனை சேர்த்து கொள்ளலாம் என பல்வேறு ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
தற்போதைய நிலையில், அமைப்பு சார்ந்த நிறுவனங்களின் மிக தரமான மோனோசோடியம் குளுட்டாமேடின் விலையை விட சீன நிறுவனங்கள் தரமற்ற இதன் தயாரிப்புகளை மிக குறைந்த விலையில் விற்கின்றன. எனவே நுகர்வோர், தரமான தயாரிப்புகளை வாங்கி பயன்படுத்தினால் எவ்வித பிரச்சனையும் ஏற்படாது.
அஜினோமோட்டோ இந்தியா பிரைவேட் லிமிடெட்-ன் இயக்குநர் அட்சுஷி மிஷுகு மற்றும் இந்நிறுவனத்தின் சந்தையாக்கல் மேலாளர் திரு. கோவிந்த பிஸ்வாஸ்