ஆக்ஸ்போர்டு அகராதியில் இணைக்கப்பட்ட ‘அய்யோ’ சொல்!

வியாழன், 29 ஜூலை 2021 (14:51 IST)
ஆக்ஸ்போர்டு அகராதியில் இணைக்கப்பட்ட ‘அய்யோ’ சொல்!
வருத்தம் அல்லது அதிர்ச்சி ஏற்படும் போது ‘அய்யோ’ என்ற சொல்லைப் பயன்படுத்துவது வழக்கம். இந்த சொல்லுக்கு தனியாக அர்த்தம் இல்லை என்றாலும் பெரும்பாலானோர் இந்த வார்த்தையை சொல்லி பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தியாவில் மட்டுமன்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்பட ஒருசில நாடுகளில் பொது மக்கள் இந்த வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த வார்த்தை தற்போது ஆக்ஸ்போர்ட் அகராதியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது இந்த தகவல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
‘அய்யோ’ என்ற சொல் பெரும்பாலும் தமிழர்கள் தான் பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் இலங்கை சிங்கப்பூர் மலேசியாவில் உள்ள தமிழர்கள் இந்த வார்த்தையை பயன்படுத்தி வருவதை அடுத்து தமிழ்மொழி பேசாதவர்களும் இந்த வார்த்தையை பயன்படுத்த தொடங்கி விட்டார்கள் என்றும் அதனை அடுத்து ஆக்ஸ்போர்ட் அகராதியில் தற்போது இந்த வார்த்தை இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்