ஓடுதளத்தில் நேருக்கு நேர்: நொடியில் தப்பிய விமானங்கள்

செவ்வாய், 27 டிசம்பர் 2016 (15:17 IST)
டெல்லி விமான நிலையத்தின் ஓடுபாதையில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோத இருந்த விபத்து நொயிடில் தவிர்க்கப்பட்டது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.


 
நன்றி: ANI

டெல்லி விமான நிலையத்தில் இன்று காலை ஸ்பைஸ் ஜெட் மற்றும் இண்டிகோ ஆகிய விமானங்களின் விபத்து நொடியில் தவிர்க்கப்பட்டது. இண்டிகோ விமானம் பயணிகளை இறக்கிவிட்டு நிறுத்துமிடத்துக்கு விரைந்தது. அப்போது பயணிகளுடன் புறப்பட ஓடிய ஸ்பைஸ் ஜெட் விமானம், இண்டிகோ விமானம் இரண்டு எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் எதிரே சந்தித்தன. 
 
இதனால் விமனத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியில் அலற தொடங்கியுள்ளனர். இரு விமானத்தின் விமானிகளும் விமானங்களின் வேகத்தை குறைத்தனர். இண்டிகோ விமானம் ஏற்கனவே தரை இறங்கியதால், அந்த விமானத்தின் வேகத்தை கட்டுப்படுத்த எளிதாக முடிந்தது. இதனால் விபத்து தவிர்க்கப்பட்டது.
 
விமான தளத்தின் கட்டுப்பட்டு அறையில் இருந்து சரியான தகவல்கள் கொடுக்கப்படாததால் இதுபோன்ற சம்பங்கள் நடைப்பெறுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்