ரூ.100க்கு விமான டிக்கெட்டை வழங்குகிறது ஏர் இந்தியா

புதன், 27 ஆகஸ்ட் 2014 (13:23 IST)
ஏர் இந்தியா விமான நிறுவனம் ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் ரூ.100 க்கு விமான டிக்கெட்டை வழங்குகிறது.

ஏர் இந்தியா விமான நிறுவனம் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் இணைந்த நாளான ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஏர் இந்தியா தினமாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி  ஏர் இந்தியா விமான நிறுவனம் இன்று முதல் 5 நாட்களுக்கு சலுகை விலையில் ரூ 100 க்கு டிக்கெட் விற்பனை செய்கிறது.

இத்தத் தருணத்தில் ஏர் இந்தியா தனது பயணிகளுக்கு சலுகை கட்டணத்தை தொடங்கியுள்ளது. இச்சலுகை திட்டத்தின்கீழ் ரூ 100 ரூபாய்க்கு டிக்கெட் (வரிகள் தவிர) விற்பனை செய்யப்படும்.

விமான டிக்கெட்களை ஏர் இந்தியா இணையதளம் மூலமாக மட்டுமே பெற முடியும். ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரையில் மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கு மட்டும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை 5 நாட்கள் சலுகை டிக்கெட் விற்பனை செய்யப்படும்.” என்று ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக ஏர் இந்தியா நிறுவனம் இத்தினத்தை கொண்டாடுகிறது. விழாவையொட்டி சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவிக்க உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்