மீண்டும் புதிய வகை கொரோனா பரவுகிறதா? அதிகாரிகள் தெரிவித்த அதிர்ச்சி தகவல்..!

திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (13:28 IST)
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாடி தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் ஆட்டி படைத்த நிலையில் மீண்டும் புதிய வகை வைரஸ் பரவி வருவதாகவும் அது குறித்து கூர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 
 
Eris என்று அழைக்கப்படும் EG.5.1 என்ற வகை கொரோனா வைரஸ் ஒமிக்ரானின் மாறுபாடாக கருதப்படுகிறது. தலைவலி, சோர்வு தும்மல் மற்றும் தொண்டை வலி ஆகியவை இந்த நோயின் அறிகுறிகள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று தற்போது வேகமாக பரவி வருவதாகவும் இது குறித்து அதிகாரிகள் கூர்ந்து கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
மேலும் ஆர்க்டரஸ் XBB.1.16 மாறுபாட்டிற்குப் பின்னர், இங்கிலாந்தில் பொதுவாக பரவி வரும் 2வது மாறுபாடு Eris என்று கூறப்படுகிறது. எனவே  பொதுமக்கள் கூட்ட நெரிசலான இடங்களில் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என கேட்டு கொள்ளப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்