பெட்ரோலை அடுத்து டீசல்: பல மாநிலங்களில் ரூ.100ஐ கடந்ததால் பரபரப்பு!

ஞாயிறு, 4 ஜூலை 2021 (12:40 IST)
தமிழகம் உள்பட பல மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூபாய் 100ஐ தாண்டி விற்பனையாகிக் கொண்டிருக்கிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் பெட்ரோலை அடுத்து டீசலும் ஒரு சில மாநிலங்களில் 100 ரூபாயை தாண்டி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்தியாவில் பெட்ரோல் விலை தொடர்ந்து டீசல் விலையும் உயர்ந்து வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் ராஜஸ்தான், ஒடிசா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஒரு லிட்டர் டீசல் ரூபாய் 100 க்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டிய நிலையில் தமிழகத்தில் கிட்டத்தட்ட 94 ரூபாய்க்கு பெட்ரோல் டீசல் விலை விற்பனையாகி வருகிறது. ஆனால் ஒரு சில மாநிலங்களில் ரூ.100ஐ டீசல் கடந்து உள்ளதை அடுத்து தமிழகம் உள்பட மற்ற மாநிலங்களிலும் ரூபாய் 100 தொட்டுவிடும் என்று அஞ்சப்படுகிறது. இந்திய வரலாற்றிலேயே பெட்ரோல் மற்றும் டீசல் விலை 100 ரூபாயை கடந்தது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்