முதல்வர் சர்ச்சை உத்தரவு எதிரொலி; தீ வைத்து எரிக்கப்படும் இறைச்சிக் கடைகள்

புதன், 22 மார்ச் 2017 (17:07 IST)
உத்திரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்குச் சொந்தமான 3 இறைச்சிக் கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
உத்திரப்பிரதேசத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் மார்ச் 17ஆம் தேதி பதவியேற்றார். அவர் பதவியேற்றவுடன் ராமர் அருங்காட்சியகம் அமைத்தல், பசுக் கடத்தல் தடை உள்ளிட்ட சர்ச்சைக்குரிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
 
இவர் முதல்வராக பதவியேற்கும் முன்பே இவருடைய சர்ச்சைக் கருத்துகளால் நாடு முழுவதும் பிரபலமானாவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. 
 
அதேபோல் ஹர்தாஸ் பகுதியில் அனுமதியின்றிச் செயல்பட்டு வந்த இறைச்சி வெட்டும் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் அந்த ஆலைக்கு அருகே உள்ள இஸ்லாமியர்களுக்கு சொந்தமான 3 இறைச்சி கடைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்.
 
இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்