இந்திய தேசிய அகாடமி தேர்வில் பெண்களையும் அனுமதிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யு.பி.எஸ்.சி நடத்தும் தேசியப் பாதுகாப்பு அகாடமிக்கான என்.டி.ஏ. தேர்வின் பாலினப் பாகுபாடின்றி பெண்கள் எழுதலாம் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இதுவரை ஆண்கள் மட்டுமே எழுதிவந்த இத்தேர்வில் இனிமேல் பெண்களும் எழுதலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பெண்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதுகுறித்து உச்சநீதிமன்றம் கூறியுள்ள தீர்ப்பில், பாலின பாகுபாடு வேண்டாம் எனவும் மத்திய அரசுக்கு மனமாற்றம் தேவை எனவும் உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றத்தைக் கட்டாயப்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.