ஹிண்டன்பர்க் நிறுவன குற்றச்சாட்டு இந்தியா மீதான தாக்குதல்: அதானி நிறுவனம் அறிக்கை

திங்கள், 30 ஜனவரி 2023 (08:08 IST)
அதானி குழுமம் முறைகேடுகள் செய்து தங்களது நிறுவனங்களின் பங்குகளின் விலையை உயர்த்தியதாக ஹிண்டன்பர்க் என்ற நிறுவனம் குற்றம் சாட்டியுள்ள நிலையில் இந்நிறுவனத்தின் குற்றச்சாட்டு அதானி குழுமத்தின் மீதான தாக்குதல் அல்ல என்றும் இந்தியா மீதான தாக்குதல் என்றும் அதானி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 
 
ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கை எந்த ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மீதான தேவையற்ற தாக்குதல் மட்டுமின்றி இந்தியா மற்றும் இந்திய நிறுவனங்களின் ஒருமைப்பாடு வளர்ச்சி ஆகியவற்றின் மீது கொடுக்கப்பட்ட தாக்குதல் என்றும் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. 
 
ஹிண்டன்பர்க் அறிக்கை முழுவதும் முரண்பாடுகளால் உள்ளது என்றும் சிறிய விற்பனையாளர் மற்றும் எண்ணற்ற முதலீட்டாளர்களின் செலவில் தவறான வழிகளில் பெரிய நிதி ஆதாயத்தை பெறுவதற்காக அந்நிறுவனம் தவறான அறிக்கை வெளியிட்டுள்ளது என்றும் அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
அதானி குழுமம் மிகவும் வலுவான உள் கட்டுப்பாடுகள் கொண்டது என்றும் இந்த குழுமத்தின் அனைத்து பட்டியலில் ஏற்பட்ட நிறுவனங்களும் வலுவான நிர்வாக அமைப்பை கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்