ஆம் ஆத்மி கட்சியின் பெண் தொண்டர் தற்கொலை

புதன், 20 ஜூலை 2016 (19:42 IST)
பாலியல் புகாரில் கைதானவர் ஜாமீனில் விடுதலையானதை அறிந்து மனமுடைந்த ஆம் ஆத்மி பெண் தொண்டர் தற்கொலை செய்துகொண்டார்.


 

டெல்லி புறநகர் பகுதி நரேலாவில் வசித்துவந்த ஆம் ஆத்மி கட்சியின் பெண் தொண்டர், சமீபத்தில் ஆக்கட்சியின் முக்கிய பிரமுகரான ரமேஷ் வாத்வா என்பவர் மீது காவல்நிலையத்தில் பாலியல் புகார் அளித்திருந்தார். புகாரில், “தன்னிடம் ரமேஷ் வாத்வா தவறான முறையில் நடந்து கொண்டதாகவும், தனது உடலின் தொடக்கூடாத பாகங்களை தொட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும்,” கூறி இருந்தார்.இதுதொடர்பாக, ரமேஷ் வாத்வா மீது வழக்குப்பதிவு செய்த டெல்லி காவல்துறையினர். அவரை கைது செய்தனர்.

இந்நிலையில் உள்ளூர் எம்.எல்.ஏ.வின் ஆதரவால் ரமேஷ் வாத்வா ஜாமீனில் விடுதலையானார்.  இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பெண் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். நேற்று பிற்பகல் விஷம் குடித்த நிலையில் தனது வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அந்தப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்