காங்கிரஸ் பலமான கட்சியாக இருக்கும் மாநிலங்களில் பஞ்சாப்பும் ஒன்று. ஆனால் இந்த முறை தேர்தலுக்கு முன்பாக அக்கட்சியில் பல குழப்பங்கள் எழுந்தன. முன்னாள் முதல்வர் பதவி விலகி பாஜகவோடு கூட்டணி வைத்தார். இதனால் காங்கிரஸின் பலம் குறைந்தது. இந்நிலையில் தேர்தலிக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்டன.
அதை உறுதி செய்யும் விதமாக இப்போது தேர்தல் முடிவுகள் வர ஆரம்பித்துள்ளன. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி 39 இடங்களில் முன்னிலை வகிக்க, இரண்டாம் இடத்தில் காங்கிரஸ் 7 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 3 இடங்களில் முன்னிலை உள்ளது.