பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக டெல்லியை மாற்றுவோம் : ஆம் ஆத்மி சூளுரை

ஞாயிறு, 3 ஜூலை 2016 (21:09 IST)
தலைநகர் டெல்லியை பிச்சைக்காரர்கள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் என்று ஆளும் கட்சியான ஆம் ஆத்மி கருத்து தெரிவித்துள்ளது.


 

 
டெல்லியில் தற்போது 75 ஆயிரம் பிச்சைக்காரர்கள் இருப்பதாக தெரிகிறது. முக்கியமாக, இவர்களில் 30 சதவீதம் பேர் 18 வயதுக்கு குறைவானவர்கள். 40 சதவீதம் பேர் பெண்கள். இவர்களால், டெல்லிக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கடும் தொல்லை ஏற்படுவதாக புகார் எழுந்தது. 
 
எனவே இந்த பிரச்சனைக்கு முடிவு கட்ட நினைத்த, ஆம் ஆத்மி அரசின் சமூக நலத்துறை அமைச்சகம், டெல்லியை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது. 
 
அதன்படி, காவல் துறையுடன் இணைந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுக்கள் பிச்சைக்காரர்களை பிடித்து நடமாடும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும், அதன்பின் அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள். அவர்களுக்கு மாற்று வாழ்வாதரங்கள் ஏற்பாடு செய்யப்படும் என்று ஆம் ஆத்மி சமூக நலத்துறை அமைச்சர் சந்தீப்குமார் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்