ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்க தடை; உச்சநீதிமன்றம் அதிரடி
வெள்ளி, 9 ஜூன் 2017 (16:10 IST)
ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்ற மத்திய அரசு முடிவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
வருமான வரி செலுத்துவதற்கு ஆதார் எண் அவசியம் என மத்த்ய அரசு அறிவித்தது. அதற்காக வருமான வரி செலுத்துவோர் அனைவரும் ஜூன் 30ஆம் தேதிக்குள் தங்கள் ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து பொதுநல வழக்கு தொடரப்பட்டது. மே 4ஆம் தேதி விசாரணைக்கு வந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேபோல் ஆதார் எண்ணை கட்டாயமாக யாரிடமும் கேட்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் பலமுறை உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இன்று வங்கி கணக்கு தொடங்கவும், கேஸ் சிலிண்டர் பெறவும் ஆதார் எண் இல்லாமல் முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.