பிரதமரைப் பார்க்க முடியாத வெறி - பஸ்சை பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திய பெண்!!

வியாழன், 20 செப்டம்பர் 2018 (13:15 IST)
வாராணாசிக்கு வந்த பிரதமர் மோடியை பார்க்க முடியாத வெறியில் பெண் ஒருவர் அரசு பஸ்சை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 17ந் தேதி தனது 68 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள்  என பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
 
இந்நிலையில் மோடி தனது பிறந்தநாளன்று தனது மக்களவைத் தொகுதியான வாரணாசிக்கு சென்று அங்கு மக்களை சந்தித்தார். பின் நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்து உதவிகளையும் வழங்கினார். இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குபெற்றனர்.
இதில் பிரதமர் மோடியை சந்திக்க முடியவில்லையே என ஒரு பெண் வருத்தத்தில் இருந்தார். வெறி தலைக்கேறிய நிலையில் அந்த பெண் வாரணாசி பேருந்து நிலையத்திற்கு சென்று அங்கிருந்த அரசு பஸ்சின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். பேருந்தில் இருந்த ஏராளமான பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். 
 
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் போராடி தீயை அணைத்தனர். போலீஸார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரித்ததில், அந்த பெண் ரகுவன்ஸி என்பது தெரியவந்தது. இவர் ஏற்கனவே அரசுக்கு எதிராக சில போராட்டங்களை நடத்தி வந்துள்ளார். அவர்மீது போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்