மனிதர்கள் வாழும் காலத்தில் ஏகப்பட்ட போட்டிகள், பொறாமைகளோடு வாழ்கின்றனர். அவனுக்கு அவ்வளவு சொத்து இருக்கிறது, அந்த கார் வைத்திருக்கிறான், இத்தனை சவரன் நகை வைத்திருக்கிறான், என ஒருவரோடு ஒப்பிட்டுக் கொண்டு அதனை அடைய ரேஸ் குதிரை போல ஓடுகிறான்.
ஏன் பலருக்கு வாழ்க்கை என்பது சிறிது, இதில் எதுவுமே நிலையல்ல, எவ்வளவு தான் சொத்து இருந்தாலும் போகும்போது நாம் எதையும் எடுத்து கொண்டு போகப் போவதில்லை அதேபோல் ஒருவருக்கு மரணம் என்பது சொல்லிவிட்டு வராது என்பதும் பலருக்கு தெரிவதில்லை. இதனை புரிந்து கொள்ளாமலே பலர் பொன், பொருளை தேடி ஓடுகின்றனர். சொத்து நிலையானது அல்ல. எப்பொழுதுவும் எது வேண்டுமானாலும் நடைபெறலாம் என்பதனை இந்த முதியவரின் மரணம் எடுத்துக்காட்டியுள்ளது.