நம்மில் பலர், திருமணமாகி புகுந்த வீட்டிற்கு போகும் பெண்கள், தனது பெற்றோர்களை பிரிகின்ற சோகத்தில் அழுது தான் பார்த்திருப்போம்.
ஆனால் மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஒரு பெண் புகுந்த வீட்டிற்கு காரில் போகும் வழியிலே சந்தோஷமாக ஒரு பாடலுக்கு டிக் டாக் செய்து அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளார். புகுந்த வீட்டிற்கு போகும்போது அழுதுகொண்டே போவது அந்த காலத்து டிரெண்டு, தற்போது ஜாலியாக புகுந்த வீட்டிற்கு போவது தான் இந்த காலத்து டிரெண்ட் என பலர் இந்த வீடியோவிற்கு பின்னோட்டமிட்டு வருகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.